May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மார்ச் காலாண்டில் வோல்டாஸ் நிறுவனம் ரூ.239 கோடி நிகர லாபம் ஈட்டியது

புது தில்லி, மே 14

கடந்த மார்ச் காலாண்டில் டாடா குழுமத்தைச் சேர்ந்த வோல்டாஸ் நிறுவனம் ரூ.239 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து வோல்டாஸ் நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

வோல்டாஸ் நிறுவனம் ஜனவரி-மார்ச் காலாண்டில் மொத்த வருவாயாக ரூ.2,683 கோடியை ஈட்டியுள்ளது. இது, நிறுவனம் 2020 இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.2,150 கோடியுடன் ஒப்பிடும்போது 25 சதம் அதிகமாகும்.

மேலும், ஒட்டுமொத்த நிகரலாபம் ரூ.160 கோடியிலிருந்து 49 சதம் அதிகரித்து ரூ.239 கோடியை எட்டியுள்ளது. கடந்த 2020-21-ஆவது நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.5 ஈவுத்தொகை வழங்க நிறுவனத்தின் இயக்குநர் குழு பரிந்துரைத்துள்ளதாக வோல்டாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love