June 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மார்ச் காலாண்டில் ஸ்மார்ட்போன் விற்பனை சீனாவின் ஜியோமி நிறுவனம் முதலிடம்

புது தில்லி, ஏப்.28

மார்ச் காலாண்டில் ஸ்மார்ட்போன் விற்பனையில், சீனாவின் ஜியோமி நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கோவிட் காலத்திற்கு பிறகு கடந்த காலாண்டில் தான் ஸ்மார்ட்போன் தேவையானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இந்த காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் ஏற்றுமதியானது கடந்த ஆண்டை காட்டிலும் 23 சதம் அதிகரித்து 38 மில்லியனுக்கும் அதிகமான யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது மிக சிறந்த விற்பனை என ஆராய்ச்சி நிறுவனமான கவுண்டர்பாயிண்ட் தெரிவித்துள்ளது.

இது புதிய போன்களின் வரத்து மற்றும் சலுகைகள் மற்றும் நிதி சலுகைகள் என பலவும் தேவைக்கு வழிவகுத்தன. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையானது காலாண்டர் ஆண்டில் முதல் காலாண்டுடன் சேர்ந்து தொடர்ச்சியாக மூன்று காலாண்டுகளாக அதிகளவிலான விற்பனையை கண்டு வருகின்றது.

இந்நிலையில், கடந்த மார்ச் காலாண்டில் வழக்கம்போல் சீனாவின் ஜியோமி நிறுவனமே முதலிடத்தில் காணப்படுகிறது. இது கடந்த ஆண்டை காட்டிலும் விற்பனை குறைந்து காணப்பட்டாலும், முதலிடத்தினை தக்க வைத்துக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டில் 31 சத பங்கினை வகித்த ஜியோமி, மார்ச் 2021 காலாண்டில் 26 சதமாக குறைந்துள்ளது. எனினும் சந்தையில் முதலிடத்தினை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இரண்டாவது இடத்தில் சாம்சங் நிறுவனம் 20 சதம் சந்தை பங்கும், விவோ மூன்றாவது இடத்திலும், ரியல்மி 4வது இடத்திலும், ஓப்போ 5வது இடத்திலும் உள்ளன. சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டில் 16 சதம் சந்தை பங்கினை கொண்டு இருந்து நிலையில், மார்ச் 2021 காலாண்டில் 20 சதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Spread the love