August 15, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மா – பழ ஈ-க்கு சாதகமான வானிலையும் மற்றும் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

பழ ஈ க்களுக்கு சாதகமான வானிலை

மாம்பழத்தில் பழ ஈ க்களின் தாக்குதல் பருவமழை காலங்களில் (ஜூன் முதல் செப்டம்பர்) ஏற்படும் பாதிப்பைவிட (பிப்ரவரி முதல் மே) கோடை காலத்தில் ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. பழ ஈ க்களுக்கு வெப்ப மற்றும் ஈரப்பத வானிலையிலும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் முதல் 35 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் முதல் 23 டிகிரி செல்சியஸ் , சராசரியாக 20 டிகிரி முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உகந்ததாகவும், காற்றின் ஈரப்பதம் 40 சதவிகிதம் முதல் 70 சதவிகிதமும், காற்றின் வேகம் 5 கிலோ மீட்டர்க்கு குறைவாக வீசும் போதும் மற்றும் மிதமான மழை அளவிலும் பழ ஈ க்களுக்கு சாதகமான சூழ்நிலைகளாகும்

பழ ஈ க்களினால் எற்படும் பாதிப்புகள்

பழ ஈக்கள் மாம்பழத்தில் உள்ள சதைப்பற்றுள்ள பகுதிகளை முட்டையிலிருந்து வரும் புழுக்கள் தின்று சேதப்படுத்துகிறது. பழங்களின் மேல் வெளிறிய மஞ்சள் நிற புள்ளகள் தென்படும் அதன் நடுப்பகுதியில் கறுப்பான புள்ளி தெரியும்.இவை திட்டு திட்டாக பழத்தின் மேற்பகுதியில் தென்படுகின்றது , இப்புளுக்களின் தாக்குதல் அதிகமாகும்போது மாம்பழங்கள் அழுகி மாம்பழத்தில் இருந்து பழுப்பு நிறத்தில் திரவம் வெளிப்படுகின்றன. மேலும் இவ்வாறு சேதம் அடையும் பழங்கள்அழுகியநிலையில் வீணாகி மரத்திலிருந்து கீழே விழுந்துவிடுகின்றது. மேலும் மாம்பழத்தில் இந்தியாவில் பழ ஈ க்களின் தாக்குதல் அரைபழுத்த மற்றும் முதிர்ந்த பழத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் சுமார் 27 சதவீதம் அறுவடை இழப்பில் சேதப்படுத்துகின்றது

பழ ஈ க்களை எவ்வாறு கண்டுபிடிப்பது

பழ ஈக்கள் முட்டையிலிருந்து வெளிவரும் போது தலை பகுதி சற்று அகன்றும் , கால்கள் இல்லா வெண்ணிற புழுக்களாக அடையாளம் காணப்படுகிறது. புழுவில் இருந்து வளர்ந்து ஈக்களாக உருமாறிய பழ ஈக்கள் கண்ணாடி போன்ற இறக்கைகள் கொண்டு பழுப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் காணப்படும்.

பழ ஈக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

பழ ஈ க்களால் பாதிக்கப்பட்ட மாம்பழங்களை பறித்து அகற்றி விடவும், மீண்டும் தாக்கப்பட்ட பழத்தில் இருந்து புழுக்கள் மற்ற பழங்களுக்கு பரவாமல் இருக்க மரத்துக்கு அடியில் விழுந்து கிடக்கும் பழங்களைச் சேகரித்து அழிக்கவேண்டும். தாக்கப்பட்ட பழங்களில் இருந்து மண்ணில் விழுந்த புழுக்கள் அல்லது கூட்டுப்புழுக்களை மரத்தைச் சுற்றி மற்றும் கோடை உழவு செய்து மண்ணின் மேல் பகுதிக்குக் கொண்டு வருவதால் அவை சூரிய வெளிச்சத்தில் பட்டு அழிந்துவிடும். மேலும் மெதைல் யூஜனால் ஒரு மில்லியை ஒரு லிட்டர் நீரில் கலந்து அதனுடன் மாலத்தியான் ஒரு மில்லியைக் கலந்து மொத்தக் கலவையில் 100 மில்லி எடுத்து ஒரு பாட்டிலில் ஊற்றி ஒரு எக்டருக்கு 25 இடங்களில் வைக்க வேண்டும். இந்த திரவத்தினால் கவரப்பட்டு பழ ஈக்களை கவரப்பட்டு பின்பு அவற்றை அழிக்கவேண்டும் மற்றும் ஒப்பியஸ் காட்பன்சேட்டஸ் மற்றும் ஸ்பாலஞ்சியா பிலிப்பைன்ஸ் போன்ற புழு ஒட்டுண்ணிகளைப் பயன்படுத்தி புழு, ஈக்களின் தாக்குதலை தடுக்கலாம்

இவ்வாறாக வேளாண்மை அறிவியல் நிலையம், பாப்பாரப்பட்டி, மாவட்ட வேளாண் வானிலை பிரிவு, தொழில் நுட்ப வல்லுநர் முனைவர் ப.அருண்குமார் (வேளாண் வானிலையியல்) முனைவர் மா.தெய்வமணி (பயிர் நோயியல்), முனைவர் ம.அ.வெண்ணிலா (வேளாண் விரிவாக்கம்), இரா.தங்கதுரை (கால்நடை) மற்றும் முனைவர் ம.விஜயகுமார் (திட்ட ஒருங்கிணைப்பாளர்) கூறினார்.

Spread the love