August 13, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மிகக் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் லாவா நிறுவனம் அறிமுகம்

பட்ஜெட்டுக்கும் குறைவாக ரூ.7,799 விலையில் Z2 Max என்ற ஸ்மார்ட்போனை லாவா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் வெண்ணிலா இசட் 2 மாடலை அறிமுகப்படுத்திய நிலையில், புதிய இசட் 2 மேக்ஸ் மாடலை லாவா அறிமுகப்படுத்தியுள்ளது.

மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகளுக்குப் பயன்படும் வகையில் குறைந்த விலை ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விலை ரூ. 7,799 மட்டுமே.

இது ஸ்ட்ரோக் ப்ளூ மற்றும் ஸ்ட்ரோக் சியான் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. லாவா வலைத்தளம், அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் இணையதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இது 7 இன்ச் எச்டி பிளஸ் தெளிவு, 720 x 1,640 பிக்சல் துல்லியம் கொண்ட டிஸ்ப்ளேவை பெற்றுள்ளது. இது 258 பிபி பிக்சல் அடர்த்தி, 20.5:9 திரை விகிதம் மற்றும் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பைக் கொண்டுள்ளது.

மேலும் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரியைக் கொண்டுள்ளது. குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ சிப்செட் புராஸசருடன் ஆண்ட்ராய்டு 10 இணையதளத்தில் செயல்படும். அத்துடன் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் தரப்பட்டுள்ளது.

லாவா இசட் 2 மேக்ஸ் டூயல் பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 13எம்பி முதன்மை சென்சார் மற்றும் 2 எம்பி இரண்டாம் நிலை சென்சார் இடம்பெற்றுள்ளது. முன்பக்கத்தில் 8 எம்பி சென்சார் நாட்ச் தரப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 6,000 எம்ஏஎச் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

இது வைஃபை, 4 ஜி வோல்டிஇ, புளூடூத் வி 5, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்களைப் பெற்றுள்ளது.

Spread the love