July 25, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மிட் பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ54 அதிக அம்சங்களுடன் அறிமுகம்

புதிய ஒப்போ ஏ54 என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் ஒப்போ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஃப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது.

புதிய ஒப்போ ஏ54 மொபைலானது 6.51′ இன்ச் எச்டி பிளஸ் தெளிவு மற்றும் 720×1600 பிக்சல் துல்லியம் கொண்ட டிஸ்பிளேவை கொண்டுள்ளது. 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 89.2 சதவீத டிஸ்பிளே டு பாடி விகிதம் மற்றும் 269 பிபி பிக்சல் டென்சிட்டி கொண்டுள்ளது. இது மீடியாடெக் ஹீலியோ பி 35 (எம்டி 6765) சிப்செட் புராஸசருடன் ஆண்ட்ராய்டு 10 சார்ந்த கலர்ஓஎஸ்7.2ல் செயல்படும்.

இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரியைக் கொண்டுள்ளது. மேலும், 256 ஜிபி வரை மெமரியை நீட்டிக்க மெமரி கார்டு ஸ்லாட் உள்ளது.

இந்த மொபைலின் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வேரியண்ட் இப்போது வெறும் ரூ.13,490 விலையில் கிடைக்கிறது. மேலும்,
இதன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வேரியண்ட் ரூ. 14,490 விலையிலும், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.15,990 விலையிலும் கிடைக்கும்.

இந்த சாதனமானது கிரிஸ்டல் பிளாக் மற்றும் ஸ்டாரி ப்ளூ என இரண்டு நிறங்களில் வருகிறது.

பின்புறம் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 13எம்பி பிரைமரி கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ செகண்டரி சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் கொண்ட டெப்த் சென்சார் ஆகியவை உள்ளது. முன்புறத்தில், இந்த ஸ்மார்ட்போனின் மேல் இடது மூலையில் அமைந்துள்ள பஞ்ச் ஹோல் கட்அவுட்டில் 16எம்பி செல்பி ஷூட்டர் உள்ளது.

இந்த சாதனம் 5,000 எம்ஏஎச் பேட்டரி திறனுடன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. அத்துடன் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் அம்சத்திற்கான ஐபிஎக்ஸ் 4 சான்றிதழ் பெற்றுள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது.

Spread the love