புது தில்லி, மே 15
இந்தியாவின் மலிவு விலை மின்சார காரின் விலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நெக்ஸான் இவி மின்சார காரை மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைச் செய்து வருகின்றது. எக்ஸ்எம், எக்ஸ்இசட் ப்ளஸ், எக்ஸ்இசட் ப்ளஸ் லக்ஸ் ஆகியே தேர்வுகளிலேயே நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இவற்றில் எக்ஸ்இசட் ப்ளஸ் மற்றும் எக்ஸ்இசட் ப்ளஸ் லக்ஸ் ஆகிய இரு வேரியண்டுகளின் விலையை மட்டுமே டாடா மோட்டார்ஸ் உயர்த்தியுள்ளது.
னால், உயர்நிலை வேரியண்டுகளான எக்ஸ்இசட் ப்ளஸ் மற்றும் எக்ஸ்இசட் ப்ளஸ் லக்ஸ் ஆகியவை ரூ. 16 ஆயிரம் விலையுயர்வுடன் விற்பனைக்குக் கிடைக்கும். முன்னதாக ரூ. 15.40 லட்சம் என்ற விலையிலேயே எக்ஸ்இசட் ப்ளஸ் வேரியண்ட் நெக்ஸான் இவி விற்பனைக்குக் கிடைத்து வந்தது. புதிய விலையுயர்வால் இதன் விலை ரூ. 15.56-ஆக உயர்ந்துள்ளது.
இதேபோன்று, ரூ.16.40 லட்சத்திற்கு கிடைத்து வந்த எக்ஸ்இசட் ப்ளஸ் லக்ஸ் நெக்ஸான் இவி புதிய விலையுயர்வால் ரூ. 16.56மாக மாறியிருக்கின்றது. இந்த அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது.