September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மின் வாகன தயாரிப்பில் மீண்டும் களமிறங்கும் எல்எம்எல் நிறுவனம்

புது தில்லி, செப்.13

கான்பூரைச் சேர்ந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான எல்எம்எல் மின்சார இருசக்கர வாகன தயாரிப்பில் வாயிலாக, மீண்டும் களத்தில் இறங்க உள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளது. துவக்கத்தில் நல்ல நிலையில் இருந்து, அதன் பின் 2017 ஜூலையில், திவால் அறிவிப்பு கொடுக்கும் நிலைக்கு இந்நிறுவனம் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது மீண்டும் சந்தைக்கு வரும் முயற்சியில் இறங்கி உள்ளது. முதலீட்டு நிறுவனம் ஒன்றின் துணையுடன் தயாரிப்பில் இறங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றபடி தயாரிக்கப்பட இருக்கும் வாகனம் குறித்த எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எல்.எம்.எல்., எலக்ட்ரிக் என குறிப்பிடப்பட்டுள்ள இந்த வாகன தயாரிப்புக்கான ஆலையை, மத்தியபிரதேசம் அல்லது ஹரியானாவில் அமைக்க இருப்பதாக தெரிகிறது.

Spread the love