January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மிளகாயில் ஏற்படும் நோய் தாக்கங்கள்

மதுரை, ஜன.8

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பகுதியில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள் அரவிந்த், சந்திரகுப்தன், ஜெயப்பிரகாஷ், உலகசெல்வன், சண்முகம், லோகேஷ்வரன், செந்தில், கணேஷ், சக்திவேல் ஆகியோர் ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் வாடிப்பட்டியில் தங்கி பயின்று வருகின்றனர். மாணவர்கள் நீரத்தான் கிராமத்தில் விவசாயி சரவணன் என்பவரது நிலத்தில் மிளகாய் உற்பத்தி பற்றியும் மிளகாயில் ஏற்படும் நோய் தாக்கங்கள் பற்றியும் விவரமாக கேட்டு அறிந்து கொண்டனர். மேலும் மிளகாய் செடியில் காணப்படும் நாற்றழுகல் மற்றும் பறவைக்கண் அல்லது பழம் அழுகல் நோய்க்கு காப்பர்ஆக்ஸி குளோரைட் 2.5 கிராம் 1 லிட்டர் தண்ணீரில் கலந்து அளிப்பது தீர்வு எனவும், நாற்றழுகல் நோய்க்கு மண்ணோடு நனைத்து (soil drenching) செய்ய வேண்டும் எனவும் மாணவர்கள் பரிந்துரைத்தனர். அதுமட்டுமின்றி மிளகாய் நாற்று நடுதலில் ஈடுபட்டு பயிற்சி பெற்றனர்.

Spread the love