மிளகு செடி. மிளகு கூர்முனை உடையாக அகன்ற அழுத்தமான இளைஞனையும் உருண்டை வடிவ பழத்தினையும் உடைய ஏறு கொடி. பழம். கொடி ஆகியவை மருத்துவ பயன் உடையவை. இதே மனம் ஊட்டுதல் முறை, நோய் அகற்றுதல், வயிற்று வாய்வு அகற்றல், செரிமானம் மிகுத்தல், வீக்கம் கரைத்தல், நரம்பு முட்டல், உடல் உரமாக்கல் ஆகிய மருத்துவ குணமுடையது. வேண்டிய அளவு மிளகை புளித்த மோரில் ஊறவைத்து உலர்த்தி இளம் வறுப்பாக வறுத்து பொடித்து அரை கிராம் தேனில் குழைத்து காலை, மாலை கொடுத்து வர வாய்வு, கபம், இருமல், செரியாமை மிகு ஏப்பம் ஆகியவை நீங்கி பசி மிகுக்கும். 3 கிராம் மிளகு பொடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 125 மில்லியாக காய்ச்சி வடிகட்டி குடித்து வர காய்ச்சல், செரியாமை, வயிற்றுப் பொருமல் ஆகியவை தீரும். மருந்தின் வீறு தணியும். அரை கிராம் மிளகுப் பொடியுடன் ஒரு கிராம் வெல்லம் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வரப் பீனிசம், தலை பாரம், தலைவலி தீரும். மிளகு 4 கிராம், பெருங்காயம் ஒரு கிராம், கழற்சிப் பருப்பு 10 கிராம் இவற்றை பொடித்து தேனில் அரைத்து 200 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகள் ஆக்கி வயதுக்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு மாத்திரைகளை காலை, மாலை கொடுக்க காய்ச்சல் தீரும்.
மிளகு செடி

Spread the love