May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மீன் அமிலம் தயாரிக்குமுறை
வேளாண் மாணவிகள் விளக்கம்

விருதுநகர், மார்ச் 11

நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழி்நுட்ப கல்லூரி மாணவிகள் த.அபிநயா, தி.பகவதி, மா.பவானி, பா.புவனேஸ்வரி, ம.தீபிகா ராய், கு.திவ்யா ஆகிய ஆறு பேர் கொண்ட ரோகர்ஸ் குழு மீன் அமிலம் தயாரிக்கும் முறை மற்றும் பயன்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினர்.

மீன் அமிலம் தயாரிக்கும் முறை மற்றும் பயன்கள் :
ஒரு கிலோ நாட்டு சர்க்கரை, ஒரு கிலோ மீன் கழிவுகள் இரண்டையும் நன்றாக கலந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் அல்லது டப்பாவில் போட்டு காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும். நாற்பது நாள்கள் கழித்து தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள் இருக்கும். மீன் கழிவுகள் அடியிலேயே தங்கியிருக்கும். இந்த திரவத்திலிருந்து துளி கூட கெட்டை வாடை வீசாது. பழவாடை வீசும். இப்படி பழவாடை வீசினால் மீன் அமினோ அமிலம் தயார் என்பதை விவசாயிகள் தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணிரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம். ஒரு முறை தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 6 மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

பயன் : பயிர்கள் புத்துணர்ச்சி அடைந்தது போல் 3 நாள்களில் செழித்து காணத் துவங்கும்.

Spread the love