July 25, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

முகக்கவசம் அணியாதவர்கள் மீது இதுவரை 4,32,262 வழக்குகள் பதிவு

சென்னை, ஏப்.20

தமிழகத்தில் முகக் கவசம் அணியாதவர்கள் மீது ஒரே நாளில் 34,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து தமிழக காவல் துறை வெளியிட்ட தகவலாவது:

தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் கோவிட் தொற்று மீண்டும் வேகமாகப் பரவத் தொடங்கியதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் மீதும், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவர்கள் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

கடந்த 8ம் தேதி தொடங்கி, 18ம் தேதி வரை 11 நாள்களில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது 4,32,262 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 34,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதேபோன்று, சமூக இடைவெளியைக் கடைபிடிக்காதவர்கள் மீது கடந்த 11 நாள்களில் 13, 487 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1, 867 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் மட்டும், முகக் கவசம் அணியாதவர்கள் மீது கடந்த 8-ஆம் தேதியில் இருந்து 18-ஆம் தேதி வரை 11 நாள்களில் மொத்தம் 11, 903 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை மட்டும் 1,401 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. கோவிட் பரவல் வேகமாக அதிகரித்து வருவதால், பொது இடங்களில் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கையை காவல்துறை இன்னும் தீவிரப்படுத்த உள்ளது.

Spread the love