June 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

முக்கிய பணிகளை தொடர்வதற்கு வார் ரூம் ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தகவல்

மும்பை, மே 6

கோவிட் தொற்றால் பாதிக்கப்படாமல், முக்கிய பணிகள் தொடர்ந்து நடக்கும் வகையில், 250 பணியாளர்களுடன் கூடிய தனி மையம் ஒன்றை, ஆர்பிஐ நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே, அதுவும் மத்திய அரசு பொது முடக்க சட்டத்தை அறிவிப்பதற்கு முன்பாகவே, கோவிட் தொற்று பேரிடரால் முக்கியமான பணிகள் பாதிக்காமல் இருக்க, போர்க்கால மையம் ஒன்றை அமைத்தது, ஆர்பிஐ, இங்கு பணியாற்றுபவர்கள் வீடுகளிலிருந்து விலகி, முழுமையாக மையத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டு, பணியாற்றி வருவதாக, ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.

திடீரென செய்தியாளர்கள் சந்திப்பை காணொலி வாயிலாக நடத்திய சக்திகாந்த தாஸ், ஆர்பிஐ எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கினார்.

இருப்பினும், இந்த மையம் எங்கு செயல்படுகிறது என்பது போன்ற தகவல்களை அவர் கூற மறுத்துவிட்டார். கடந்த ஆண்டு பெயர் குறிப்பிடாத விடுதியில் போர்க்கால மையம் நடைபெற்றது.இப்போது அதே இடத்தில் செயல்படுகிறதா என்ற கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை. ஆர்பிஐ மும்பையை தலைமையகமாக கொண்டு, 31 பிராந்திய அலுவலகங்களுடனும், 14 ஆயிரம் ஊழியர்களுடனும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Spread the love