August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

முசுமுசுக்கை

முசுமுசுக்கை சுனை உடைய இலைகளையும் செந்நிற பழங்களையும் உடைய பற்றுக்கம்பிகள் உள்ள ஏறுகொடி. வேலிகளில் தானாகவே வளரக்கூடியது. இலை, வேர் ஆகியவை மருத்துவ குணம் கொண்டவை. இலை கோழையை அகற்றும் தன்மையுடையது. வேர் பசி மிகுத்தல் நன்றி நீக்குதல் குணம் கொண்டது. மூன்று பிடி இலையை தோசை மாவுடன் அரைத்து தோசை செய்து சாப்பிட அல்லது வதக்கி துவையல் பயன்படுத்தி வர ஜுரம், சளி ஜுரம், இருமல், இரத்த காசம், ருசியின்மை, நீர்க்கோவை, மூக்கு ஒழுகுதல், மூக்குப்புண் வாசனை தீரும். முசுமுசுக்கை வேர் 120 கிராம் ஆடாதொடை வேர் 80 கிராம் திப்பிலி, சுக்கு, மிளகு வகைக்கு பத்து கிராம் லவங்கம் 2 கிராம் சூரணத்தை 5 அரிசி எடை வெற்றிலையுடன் உட்கொண்டு பால் அருந்தி வர சுவாச உறுப்பு துப்புரவு ஆகும். உறைந்த சளி வெளியேறும். இருமல் என்புருக்கி தீரும். சாற்றுடன் சமன் நல்லெண்ணைய் கலந்து காய்ச்சி வாரம் ஒரு முறை தலை முழுக இருமல், இரைப்பு இருமல், ஆஸ்த்மா என்புருக்கி, கண்ணெரிச்சல், உடம்பு எரிச்சல் தீரும். 20 கிராம் 10 கிராம் சிதைத்து 150 மில்லி பாலில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி காலை, மாலை பருகி வர மிகையான சளி தொண்டைக் கம்மல் ஆகியவை குணமாகும்.

நன்றி : ASN சாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை, ஆதனூர், திருவண்ணாமலை மாவட்டம். 94423 11505.

Spread the love