August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

முட்டை விலை 20 காசுகள் சரிவு

நாமக்கல், ஆக. 1

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிர்ணயம் குறித்து பண்ணையாளர்களிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டன. மற்ற மண்டலங்களில் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாலும், ஆடி மாதமாக இருப்பதால் மக்களிடையே முட்டை நுகர்வு வெகுவாக குறைந்துள்ளதாலும், தேக்கத்தை கட்டுப்படுத்தவும் முட்டை விலையைக் குறைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் குறைத்து ரூ.4 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 81-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 90-ஆகவும் நி்ர்ணயிக்கப்பட்டது.

Spread the love