June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

முட்டை விலை 385 காசாக நிர்ணயம்

நாமக்கல், ஏப்.28

தமிழகம், கேரளாவில், முட்டை விலை, 385 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது. முட்டை உற்பத்தி, விற்பனை நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். அதையடுத்து, 415

காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை, 30 காசு குறைத்து, 385 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

நாட்டின் பிற மண்டல முட்டை விலை (காசுகளில்) நிலவரம்: சென்னை, 445, ஐதராபாத், 356, விஜயவாடா, 383, பர்வாலா, 346, மும்பை, 420, மைசூரு, 410, பெங்களூரு, 410, கோல்கட்டா, 436, தில்லி, 358.

கிலோ, ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டைக்கோழி விலையை, ரூ.10 குறைத்து, ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டது. கிலோ, ரூ.78க்கு விற்பனை செய்யப்பட்ட வந்த கறிக்கோழி விலையை,

இரண்டு ரூபாய் உயர்த்தி, ரூ.80 என நிர்ணயம் செய்யப்பட்டது.

Spread the love