August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு திட்ட விவசாயிகள் பயிற்சி

புதுக்கோட்டை, ஜூலை 4

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் வட்டாரம் வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமை அட்மா – மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி 40 விவசாயிகளுக்கு கலைஞர் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் ஒன்றான ஆலத்தூர் கிராமத்தில் வேளாண்மை துணை இயக்குநர் உழவர் பயிற்சி நிலையம் மா.பெரியசாமி மற்றும் வேளாண்மை துணை இயக்குநர் மத்திய அரசு திட்டம் வி.எம். ரவிச்சந்திரன் ஆகியயோர் தலைமையில் அன்னவாசல் வேளாண்மை உதவி இயக்குநர் அ.பழனியப்பா முன்னிலையில் நடைபெற்றது.

பயிற்சியில் வேளாண்மை துணை இயக்குநர் மா.பெரியசாமி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட ஆலத்தூர் கிராமத்தில் நடப்பாண்டு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் அட்மா திட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கண்டுணர்வு பயணங்கள், செயல்விளக்கங்கள் மற்றும் பயிற்சிகளின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்தார். வேளாண்மை துணை இயக்குநர் மத்திய அரசு திட்டம் வி.எம். ரவிச்சந்திரன், மானாவாரி நிலங்களில் சிறுதானிய பயிர்களான கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, குதிரைவாலி ஆகிய பயிர்கள் சாகுபடி மேற்கொள்வதினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் சாகுபடியில் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கி கூறினார். மேலும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

அன்னவாசல் வேளாண்மை உதவி இயக்குநர் அ.பழனியப்பா, செம்மை நெல் சாகுபடி முறைகள், பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும் நெல் வரப்பில் பயறு சாகுபடி செய்வதினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் மண்வளத்தை காக்க இயற்கை உரங்களை பயன்படுத்துவதன் அவசியம், பயிர் பாதுகாப்பு முறைகள் உள்ளிட்ட தொழில்நுட்பங்களும் சாகுபடிக்கு முன் பசுந்தாள் உரப்பயிர்களான கொளிஞ்சி, தக்கை பூண்டு, சணப்பு ஆகியவற்றை சாகுபடி செய்து பூக்கும் தருணத்தில் மடக்கி உழவு செய்து மண்வளத்தை காக்க வேண்டும் என. விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

குடுமியான்மலை மண்பரிசோதனை வேளாண்மை அலுவலர்கள் பாக்கியலெட்சுமி மற்றும் பொன்தாரினி ஆகியோர் மண்மாதிரிகள் சேகரிக்கும் முறைகள் குறித்து வயலில் செய்விளக்கம் செய்து காண்பித்து மண்பரிசோதனை செய்வதினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பயிர் சாகுபடியில் மண்ணிற்கு தேவையான சத்துகள் குறித்து விவசாயிகளிடம் தெரிவித்தார். அன்னவாசல் வேளாண்மை அலுவலர்கள் கவுசல்யா மற்றும் மோனிகா ஆகியோர் கலந்துக் கொண்டு மானாவாரி உளுந்து சாகுபடியில் பூக்கும் தருணத்தில் 2 சதவீத டிஏபி கரைசல் தெளிப்பதன் அவசியம் அதனால் ஏற்படும் நன்மைகள், நிலக்கடலை சாகுபடியில் ஜிப்சம் இட்டு மண் அணைப்பதினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விவசாயிகள் சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பகள் குறித்து விவசாயிகளிடம் தெரிவித்தார். முன்னதாக உதவி வேளாண்மை அலுவலர் சண்முகபிரியா அனைவரையும் வரவேற்றார் உதவி தொழில்நுட்ப மேலாளர் நவாப்ராஜா நன்றி கூறினார்.

Spread the love