January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

முதல் ஆட்டோமேட்டிக் ஹைப்ரிட் டிராக்டர் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம்

புது தில்லி, மே 8

இந்தியாவின் முதல் முழு ஆட்டோமேட்டிக் ஹைப்ரிட் டிராக்டரான இதனை நொய்டாவை சேர்ந்த ப்ராக்யஸக்டோ என்ஜினியரிங் சர்வீஸ் & எச்ஏவி டிராக்டர்கள் என்ற நிறுவனங்கள் தயாரித்துள்ளன.

இந்த எச்ஏவி எஸ்1 வரிசை டிராக்டர்கள் இந்திய விவசாயிகளுக்காக விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பான வடிவத்திலான கேபின் உடன் ஆரம்ப நிலை எச்ஏவி எஸ்1 50எச்பி வேரியண்ட்டின் விலை ரூ.9,49,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதுவே ஏசி கேபினை கொண்ட டாப் வேரியண்ட்டான எச்ஏவி எஸ்1+ 50எச்பி-இன் விலை சற்று அதிகமாக ரூ.11,99,000 என கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு தொகை ரூ.10,000 ஆகும். பேட்டரி தொகுப்புகள் இல்லாததினால் வெவ்வேறான, பல்வேறுப்பட்ட எரிபொருள்களில் இந்த எச்ஏவி ஹைப்ரிட் டிராக்டர்கள் இயங்கும். அதேநேரம் இவற்றை முழுவதும் எலக்ட்ரிக் வாகனமாகவும் அப்கிரேட் செய்து கொள்ளலாம்.

இந்த டிராக்டரில் க்ளட்ச் இல்லை, கியர் கிடையாது. எளிமையான பயன்பாட்டிற்கு முன்னோக்கி-நடுநிலை-பின்னோக்கி என்ற மூன்று ட்ரைவிங் மோட்கள் மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளன. சக்கரங்கள் அனைத்திலும் பொருத்தப்பட்டுள்ள சுதந்திரமான சஸ்பென்­ன் அமைப்பு உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் உள்ளது.

எச்ஏவி எஸ்1 50எச்பி டிராக்டர்கள் உடன் ரூ.8.49 லட்சத்தில் எஸ்1 45எச்பி டிராக்டரையும், எஸ்1 55எச்பி டிராக்டரையும் அறிமுகப்படுத்துவதாகவும், இது குறித்து விபரங்களை தங்களது இணையத்தள பக்கத்தில் தெரிந்துக்கொள்ளலாம் என எச்ஏவி டிராக்டர்கள் நிறுவனத்தின் நிறுவனர் அன்கிட் தியாகி தெரிவித்துள்ளார்.

Spread the love