July 25, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

முதல் காலாண்டில் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் ரூ.16,724 கோடி வருவாய் ஈட்டியது

புது தில்லி, ஜூலை 22

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு மொத்த வருவாய் ரூ.16,724.05 கோடி ஈட்டியதாக தெரிவித்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருமானம் ரூ.19,057.42 கோடியுடன் ஒப்பிடும்போது கணிசமான சரிவாகும். வருவாய் குறைந்துபோனதையடுத்து 2021-22ம் நிதியாண்டின் ஜூன் காலாண்டில் நிறுவனத்துக்கு ரூ.185.73 கோடி அளவுக்கு நிகர இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், கடந்த 2020-21 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ.287.59 கோடியை நிகர லாபமாக பதிவு செய்திருந்தது.

மேலும், ஒட்டுமொத்த வருவாயில், நிகர பிரீமியம் வருவாய் ரூ.5,551.07 கோடியிலிருந்து ரூ.6,601.85 கோடியாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் ரூ.500 கோடி அளவுக்கு கொரோனா தொடர்பான இழப்பீடு கோரிக்கைகள் வந்ததாக ஐசிஐசிஐ புரூடென்´யல் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

Spread the love