August 4, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

முதல் ஹீரோ மின்சார ஸ்கூட்டர் எப்போது விற்பனைக்கு வருகிறது

இந்தியச் சந்தையில் மின்சார பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்துவதில் அனைத்து மோட்டார் வாகன நிறுவனங்களும்
மும்முரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டோகார்ப்பும் மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் மின்சார ஸ்கூட்டர் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹீரோ எலெக்ட்ரிக் என்ற பிராண்டில் ஏற்கனவே இந்திய சந்தையில் மின்சார பைக்குகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.குறிப்பிடத்தகுந்தது. இந்த வரிசையில் முதல் கட்டமாக டூயட் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் அடிப்படையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நிறுவனம் சில வருடங்களுக்கு முன்னரே அறிமுகப்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் ஹீரோ மோட்டோகார்ப் பிராண்டில் முதல் மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துவதற்கான பணிகளை தற்போது மேற்கொண்டு வருகிறது.

இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐ-க்யூப் மற்றும் ஏத்தர் உள்ளிட்ட பிராண்டுகளுக்கு புதிய ஸ்கூட்டர் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love