June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

முத்தான வருமானம் தரும் முளைக் கீரை சாகுபடி

இயற்கை விவசாயிகளாக இருந்தாலும் சரி, இரசாயன உரம் பயன்படுத்தும் விவசாயிகளாக இருந்தாலும் சரி, பெரும்பாலானவர்கள் தேடித்தேடி விதைப்பது குறுகிய காலத்தில் அதிக வருமானம் கொடுக்கும் பயிர்களில் முளைக்கீரை குறுகிய காலத்தில் நல்ல வருமானம் கொடுக்கும் பயிர்களில் ஒன்றாக திகழ்கிறது.

பருவங்கள் :
இதனை ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். சித்திரை, ஆடி, மார்கழி மற்றும் மாசிப் பட்டம் ஏற்ற பருவங்கள் ஆகும்.

மண் :
நல்ல மண்ணும், மணலும் கலந்த சற்றே அமிலத்தன்மை கொண்ட இருமண் பட்டு நிலம். செம்மண் நிலம் கீரை சாகுபடிக்கு உகந்தது. அதிக களிமண் மற்றும் முற்றிலும் மணல் கொண்ட நிலத்தை தவிர்க்க வேண்டும்.

விதையளவு :
ஒரு ஏக்கருக்கு 2.5 கி.கி விதைகள் வீதம் தேவைப்படும்.

நிலம் தயாரித்தல் :
நடவுக்கு தேர்தெடுத்த நிலத்தை ஏக்கருக்கு 5 டன் தொழு உரம், 4 டன் எருவைப் பரவலாகக் கொட்டி உழவு செய்து மண்ணை பயன்படுத்த வேண்டும். பிறகு தேவையான அளவு பாத்திகள் அமைக்க வேண்டும்.

விதைத்தல் :
கீரை விதைகள் அளவில் சிறியவை என்பதால் விதைகளோடு மணல் கலந்து பாத்திகளில் தூவி விட வேண்டும். பின் கையால் கிளறி பாசனம் செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம் :
விதைகளை விதைத்தவுடன் நீர்ப்பாய்ச்ச வேண்டும். முக்கியமாக நீர் ஒரு பக்கமாக அடித்து செல்லாமல் கவனமாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்பு விதைத்த மூன்றாம் நாள் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

உரங்கள் :
ஜீவாமிர்தக் கரைசல் அல்லது பஞ்சகாவ்யா கரைசலை 7 நாட்களுக்கு இடைவெளியில் இரண்டு முறை பாசன நீரில் கலந்து விட வேண்டும்.

பாதுகாப்பு முறைகள் :

களை நிர்வாகம் :
ஒரு வாரத்திற்குள் விதைகள் முளைக்க ஆரம்பித்து விடும். 10-15 நாட்கள் கழித்து களை எடுக்க வேண்டும். பயிர்களின் எண்ணிக்கை பொறுத்து பயிர்களை களைத்தல் வேண்டும்.

பயிர் பாதுகாப்பு :

பூச்சி தாக்குதல்
கீரைகளில் பூச்சிகள் தாக்குதல் காணப்பட்டால் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் மூன்றையும் சம அளவில் எடுத்து இடித்து ஒரு லிட்டர் மாட்டு சிறு நீரில் கலந்து 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசல் என்ற விகிதத்தில் கலந்து 10 நாட்களுக்கு ஒரு முறை அதிகாலை வேளையில் தெளிக்க வேண்டும்.

அறுவடை :
விதைத்த 20-25 நாட்களில் கீரைகளை வேருடன் பறிக்க வேண்டும். கீரைகள் நன்கு முற்றிவிடாமல் சரியான பருவத்தில் அருவடை செய்ய வேண்டும்.

முளைக்கீரையின் மருத்துவ பயன்கள் :
v முளைக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு சத்து மற்றும் தாமிரம் இரண்டும் உடலுக்கு அதிகளவு ஆரோக்கியத்தை அளிக்கிறது.
v முளைக்கீரை நாம் அதிகளவு உட்கொண்டால் இரத்த சோகையை குணப்படுத்தும் அரு மருந்தாக விளங்குகிறது. தினமும் முளைக்கீரை சாப்பிட்டு வந்தால் சொரி, சிரங்கு பிரச்சினைகள் குணமாகிறது.
v இளைத்த உடல் தேறவும், தேகத்திற்கு வலு கிடைக்கவும் இது சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
v இக்கீரையில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை சீராக்கவும், கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவுகிறது.
v இருமல், தொண்டை புண் போன்ற பிரச்சினைகளுக்கு முளைக்கீரை தீர்வாகிறது.

கட்டுரையாளர்கள் : முனைவர் பி.ஜெய்சங்கர், உதவி பேராசிரியர், தோட்டக்கலை துறை, E mail : sankarjai03@gmail.com, செ.தினேஷ்குமார், உதவி பேராசிரியர், வேளாண் விரிவாக்க துறை, E mail : dinezselva@gmail.com, ல.விஷ்ணு, உதவி பேராசிரியர், தோட்டக்கலை துறை, E mail : agrivish@gmail.com, ம.சௌந்தர்யன், வேளாண் பொருளாதார துறை, E mail : soundariyanm@gmail.com, தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரி, பெரம்பலூர்.

Spread the love