August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

முந்திரி மதிப்பு கூட்டலில் உள்ள சிக்கல்களும் தீர்வுகளும்

• புதுக்கோட்டையில் 2042 ஹெக்டர் பரபளவில் முந்திரி உற்பத்தி செய்யப்படுகிறது. இருப்பினும் கந்தர்வக்கோட்டை அடுத்து உள்ள ஆதனக்கோட்டை சாலையின் சிறு கீற்று கடைகளின் முந்திரிக்கு தனி மதிப்புஉள்ளது.
• ‘கையால் வறுத்து உடைத்த முந்திரி பருப்பு குடிசை தொழில்’ என கடந்த ஜூலை 2015ல் மாவட்ட தொழில் மைய சான்று பெற்ற தொழிலானது தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது.

சிக்கல்கள் :
• நீர்நிலைகள் ஆக்கிரமிப்பும் தூர்வாரப்படாததால் நீர்பிடிப்பு பகுதிகள் குறைந்து வருவதும் தண்ணீர் தட்டுப்பாடு, குளிர்பதன கிடங்குகள், மாற்று பயிர் தேர்ந்தெடுப்பு என வரிசைக் கட்டும் காரணங்கள் பாரம்பரிய தொழிலாளர்களை கைவிட செய்கிறது.

• இதுவன்றி பழைய சாகுபடி முறை, இயந்திரங்கள் வாங்குவதற்கு மானியம் இல்லாமை, கலப்பின ரகங்களை பயிரிடுவதற்கும், இயந்திரமயமாக மாறுவதற்கு விவசாயிகள் தயக்கம் காட்டுவது விலை பொருட்களின் மதிப்பு மோசமாக்குகிறது.

• இத்தொழிலில் முழு அளவிலான கிடங்கு வசதி மற்றும் காய்களுக்கு உலர்த்தும் கூடம், குளிர்பதன கிடங்கு ஆகியவைகளை பூர்த்தி செய்ய பண்ருட்டி முந்திரி பருப்பு வேளாண்மை ஏற்றுமதி மண்டலம் போன்ற வசதிகளை அருகாமையில் அமைக்க கோரிக்கை வைக்கின்றனர் உற்பத்தியாளர்கள்.

தீர்வுகள் :
• VRI 3 மற்றும் VR I (LH) 1 ரகங்களை தேர்ந்தெடுப்பது இந்த மாவட்டத்தின் மண்ணின் தன்மைக்கு ஏற்படியால் அதிக மகசூலையும் லாபத்தை பெருக்கலாம்.

• வயதான தாவரங்களை மாற்றுவதன் மூலம் உற்பத்தியை மேம்படுத்தலாம்.
• முந்திரி மற்றும் கொக்கோவிற்கான ‘புதிய தோட்ட அபிவிருத்தி திட்டத்தின்’ கீழ் அரசு 60:20:20 என மூன்று தவணைகளில் நடவு பொருட்களுக்கான செலவு மற்றும் உற்பத்தி பொருட்களின் விலையை சந்திக்க ஹெக்டருக்கு ரூ.20,000 நிதி உதவி சொட்டு நீர் அமைப்புடன் உதவுகிறது.

• குறிப்பாக பூச்சிக்கொல்லி இல்லாத தயாரிப்புகளின் தேவை சாதாரண விளைச்சலை விட 25% – 30% வரை நிர்ணயிக்கிறது.

தகவல் : முனைவர் ஆ.ராமச்சந்திரன், Ph.D(Agronomy), மாணவர்கள் : பொய்யாமொழி காவேரி.பு, பாரதாப்ரியன் நீதிசோழன்.ரா, சுர்ஜித் அஜய்.செ, சாமுவேல்ராஜ்.சு, பூவரசன்.வெ, அபிஜித்சந்திரன், அருண்.ரா, யுவராஜ்.கு, தரணீஷ்.செ.க, ராஜாபிரவீன்.ரா, மஞ்சுநாத்.சா. ‘ஊரக பணி அனுபவ திட்டம்’ கந்தர்வக்கோட்டை மாணவர்கள். மதர் தெரசா வேளாண்மை கல்லூரி – மேட்டுச்சாலை, இலுப்பூர், புதுக்கோட்டை.

Spread the love