September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

முன்னுரிமை பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.2,335 கோடி திரட்ட எல்ஐசி ஹவுஸிங் திட்டம்

மும்பை, செப்.11

முன்னுரிமை பங்கு வெளியீட்டின் மூலமாக ரூ.2,335 கோடியை திரட்டியுள்ளதாக எல்ஐசி ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: விரிவாக்க நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியை முன்னுரிமை பங்கு வெளியீட்டின் மூலமாக எல்ஐசி ஹவுஸிங் ஃபைனான்ஸ் திரட்டியுள்ளது. இந்த வகையில், ரூ.2.335.5 கோடி பெறப்பட்டுள்ளது. மேலும், இதன் தாய் நிறுவனமான எல்ஐசி-க்கு 4,54,00,000 பங்குகளை ஒதுக்கீடு செய்து இந்த தொகையை எல்ஐசி ஹவுஸிங் திரட்டியுள்ளது. பங்கு ஒன்றின் விலை ரூ.514.43-ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வியாழக்கிழமை அன்று வர்த்தகத்தில் எல்ஐசி ஹவுஸிங் ஃபைனான்ஸ் பங்கின் விலை 0.23 சதம் அதிகரித்து ரூ.419.30-இல் நிலைத்தது குறிப்பிடத்தக்கது.

Spread the love