May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

முருங்கைக்காய் கிலோ ரூ.5க்கு விற்பனை

திண்டுக்கல், ஏப்.26

விருவீடு பகுதியில் முருங்கைக்காய் அதிக விளைச்சல் மற்றும் போக்குவரத்து சிரமங்களால் கிலோ ரூ.5க்கு விற்பதா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு வட்டாரம், விருவீடு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. பருவத்தில் நல்ல மழை பெய்ததால் முருங்கை விளைச்சல் அதிகமாகி மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்தது. தற்போது கரோனா கட்டுப்பாடுகளால் போக்குவரத்து சிரமங்கள் உள்ளதால் வெளி மாவட்டங்களுக்கு அனுப்ப முடியவில்லை. மேலும் வியாபாரிகளும் காய்களை வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் கிலோ ரூ.5க்கு விற்பனையாகிறது.

இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், தக்காளி கிலோ ரூ.5, 6 க்குத்தான் விற்பனையானது. பின்னர் கத்திரிக்காய் சாகுபடி செய்தபோதும் கிலோ ரூ.5க்குத்தான் விற்பனையானது. தற்போது முருங்கைக்காய் விலையும் அதேபோல ஆகியுள்ளதால், நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடு செய்ய வழி தெரியாமல் உள்ளோம் என தெரிவித்தனர்.

Spread the love