August 13, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

முருங்கைக்காய் விலை உயர்வு

திருப்பூர், மே 14

வரத்து குறைந்துள்ளதால், முருங்கை விலை உயர்ந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் பகுதியில் முருங்கை விலை கிலோ ரூ.25க்கு விற்பனையாகிறது. முருங்கைக் காய்க்கு மாசி, பங்குனி மாதங்கள் சீசன் காலம் ஆகும். இந்த ஆண்டு பருவமழை முடிவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்டதால் ஒரு மாதம் தாமதமாக சீசன் துவங்கியது. சந்தைக்கு முருங்கை வரத்து அதிகரித்ததால் பங்குனி மாதத்தில் விலை கடுமையாக சரிந்தது. மர முருங்கை ஒரு கிலோ ரூ.2க்கும், செடிமுருங்கை ரூ.5க்கும் விற்பனையானது. பறிப்பு கூலிக்கு கூட கட்டுப்படி ஆகாமல் விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். இந்நிலையில் தற்போது முருங்கை சீசன் முடிவுறும் தருவாயில் உள்ளது. வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது. தற்போது ஒரு கிலோ, ரூ.25 வரை விற்பனையாகிறது.

Spread the love