May 10, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

முருங்கையில் மதிப்பு கூட்டு பொருள் வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்

தர்மபுரி, ஏப்.30

முருங்கை விளைச்சல் அதிகரித்துள்ளதால், அதை விவசாயிகள் மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி பயன்பெற வேண்டும் என, பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய, திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில், முருங்கை விலை சரிந்து வருகிறது. இம்மாத முதல் வாரத்தில், ஒரு கிலோ முருங்கை, ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனையானது. பின் வரத்து அதிகரித்ததால், இரண்டாவது வாரத்தில் கிலோ, ரூ.40க்கும், இரு தினங்களுக்கு முன், ரூ.30க்கும், நேற்று ரூ.25க்கும் விற்பனையானது. இந்த விலை சரிவை சரிகட்ட, இதை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி பயன்பெறலாம். முருங்கை விவசாயிகளுக்கு, மதிப்பு கூட்ட பயிற்சி மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இவற்றின் மத்திப்புக்கூட்டு இயந்திரம், தற்போது செக்கோடியிலுள்ள ஸ்ரீகிரிவாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் மட்டுமே உள்ளது. விவசாயிகளை அங்கு அழைத்துச்சென்று பயிற்சி வழங்கப்படுகிறது. அங்கு, முருங்கை கீரையை பயன்படுத்தி, முருங்கைக்கீரை பிஸ்கட், உடனடி முருங்கை சூப் பொடி மற்றும் சப்பாத்தி தயாரிக்கும் மாவு பொடி ஆகியவற்றை மதிப்பு கூட்டு பொருளாக தயாரிக்கலாம். காய்களை கொண்டு உலர் ஊறுகாய் தயாரித்து சந்தைப்படுத்தலாம். இந்த மதிப்பு கூட்டு இயந்திரம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில் காட்சி படுத்தப்பட்டு, விரைவில் மானிய விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது என அவர் கூறினார்.

Spread the love