June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

முருங்கை பதியம் போடுதல் செயல்விளக்கமளித்த தோட்டக்கலை மாணவிகள்

தேனி, ஏப்.1

ஊரக தோட்டக்கலை பணி அனுபவ களப்பணியில் தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் தங்கியிருக்கும் திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவிகள் முருங்கை பதியம் போடுதல் குறித்து எருமலைநாயக்கன்பட்டி விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.

விதை மற்றும் வெட்டு தண்டுகள் மூலம் நாற்று உற்பத்தி செய்யும் போது ஐம்பது சதவீத நாற்றுகள் மட்டுமே கிடைக்கிறது. ஆனால், பதியம் போடும் போது தொண்ணூறு சதவீத நாற்றுகள் கிடைக்கிறது. தாய் செடியில் நன்கு வளர்ச்சி பெற்ற மரக்கிளைகளின் பட்டையை வட்ட வடிவில் வெட்டி, தண்ணீரில் நனைத்த தென்னை நாரை அந்த இடத்தில் வைத்து காற்று புகா வண்ணம் இறுக்கமான கட்ட வேண்டும். அந்த இடம் காய்ந்து விடா வண்ணம் தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும். ஒரு மாதத்தில் வேர்கள் நன்கு வளர்ந்ததும் தாய் செடியிலிருந்து பிரித்து நடலாம்.

தேவதானப்பட்டி அருகிலுள்ள எருமலைநாயக்கன்பட்டி விவசாயிகளுக்கு முருங்கையில் பதியம் போட்டு நாற்று தயாரிக்கும் முறையை மாணவிகள் சங்கவி, சசிரா, சைனி, சிந்துஜா, சௌமியா, ஸ்ரீலட்சுமி ஆகியோர் செயல்விளக்கம் அளித்தனர். இதில் அப்பகுதியைச் சார்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Spread the love