August 4, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

முருங்கை விலை கிலோ ரூ.10ஆக சரிவு

திண்டுக்கல், ஜூலை 22

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கை விலை சரிவடைந்து கிலோ ரூ.10க்கு விற்பனையானதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையம், மார்க்கம்பட்டி, இடையகோட்டை, அம்பிளிக்கை, சாலைபுதூரில் செடிமுருங்கை அதிகமாக பயிரிடப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரத்து குறைவு காரணமாக முருங்கை விலை அதிகபட்சமாக கிலோ ரூ.65க்கு விற்பனையாகிறது. இந்த வாரம் உள்ளூர் பகுதிகளில் இருந்து வரத்து அதிகமாக காணப்பட்டது. இதன் காரணமாக விலை குறையத் தொடங்கியது. ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு கிலோ செடி முருங்கை ரூ.28க்கு விற்பனையானது. புதன்கிழமை கிலோவுக்கு ரூ.18 குறைந்து ரூ.10க்கு விற்பனையானது. ஒரே வாரத்தில் முருங்கை விலை சரிவை கண்டு இருப்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Spread the love