August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

முருங்கை விலை சரிவால் விவசாயிகள் கவலை

சேலம், மே 17

முருங்கை விலை சரிவால் விவசாயிகள் செய்வதறியாது புலம்பி தவிக்கின்றனர்.

சேலம் மாவட்டம், தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, ஞாயிற்றுக்கிழமை, 5 டன் முருங்கைக்காய் வரத்து இருந்தது. ஒரு கிலோ, ரூ.10 முதல் ரூ.12 வரை விலை போனது. ஆனால், கடந்த, 13ம் தேதி கிலோ, ரூ.22 முதல் 25 வரை விற்பனையானது. வரத்து அதே அளவு இருந்தும், வெளியூர் வியாபாரிகள் வருகை, நுகர்வு குறைவால், முருங்கை விலை குறைந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர். விளைச்சல் அதிகரித்த நிலையில், விலை கிடைக்கவில்லை என, விவசாயிகள் புலம்பி தவித்து வருகின்றனர்.

Spread the love