August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

முருங்கை விளைச்சல் அதிகரிப்பு

சென்னை, ஏப்.22

முருங்கைக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதால், அவற்றின் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது.

தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட, பல்வேறு மாவட்டங்களில் முருங்கை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் இருந்து,

முருங்கை இலைகள் மற்றும் பூக்களை பறித்து, உணவுக்காகவும், மருந்துக்காகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முருங்கைக்காய் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு

மட்டுமின்றி கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும், விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தமிழகத்தில், 2020 அக்டோபர் முதல் முருங்கைக்காய் விளைச்சல் குறைந்து இருந்தது.

இதனால், குஜராத், மும்பை உள்ளிட்ட இடங்களில் இருந்து, அவை விற்பனைக்கு வந்தன. 1 கிலோ முருங்கைக்காய், மொத்த விலையில், ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது.

சில்லரை விலையில், ஒரு முருங்கைக்காய் ரூ.50க்கு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், முருங்கைக்காய் விளைச்சல் கணிசமாக

அதிகரித்து உள்ளது. இதனால், மார்க்கெட்டுகளில் அவை விற்பனைக்கு குவிந்துள்ளது. தேவைக்கும் அதிகமாக விளைச்சல் இருப்பதால், அவற்றிற்கு போதிய விலைகிடைக்கவில்லை.
கோயம்பேடு மார்க்கெட்டில், மொத்த விற்பனையில், 1 கிலோ முருங்கைக்காய், ரூ.10 முதல் ரூ.15க்கும், சில்லரை விலையில், ரூ.20க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முருங்கைக்காய் விலை

வீழ்ச்சி அடைந்துள்ளதால், அவற்றை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Spread the love