August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

முலாம்பழம் விற்பனை அதிகரிப்பு

நாமக்கல், மே 3

கோடையின் தாக்கத்தால் நாமக்கல்லில் முலாம் பழங்கள் விற்பனை மும்முரமாக நடக்கிறது. உடலுக்கு குளிர்ச்சி தரும் முலாம் பழம் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தின்போது கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து நாமக்கல்லுக்கு கொண்டு வரப்படுகிறது. நாமக்கல்லில் பல்வேறு சாலைகளில் முலாம் பழம் விற்பனை அதிகளவில் நடக்கிறது.

இது குறித்து, வியாபாரி ஒருவர் கூறியதாவது: கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து வாங்கி வரப்பட்ட முலாம் பழம், கிலோ, ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையாகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர் அதேபோல், பழச்சாறு கடை வைத்திருப்போர் மொத்தமாக முலாம் பழங்களை வாங்கிச் செல்கின்றனர் என தெரிவித்தார்.

Spread the love