May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

முலாம்பழ விலை கடும் சரிவு

கோவை, மே 14

முலாம் பழம் விற்பனை சரிவால் கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கரோனா தடுப்பு ஊரடங்கால், அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பழக்கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், பழங்களின் விற்பனை சரிந்துள்ளது. குறிப்பாக, கோடை காலத்தில் அதிகம் விளையும் முலாம்பழம், வரத்து அதிகம் இருந்தாலும், விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால், விளையும் பகுதிகளில் இருந்து குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து வரும் வியாபாரிகள், சாலையோரங்களில் சரக்கு வாகனங்களில் வைத்து விற்பனை செய்கின்றனர். கடந்த வாரம், கிலோ, ரூ.20க்கு விற்பனையான முலாம்பழம், தற்போது விலை சரிந்து, கிலோ ரூ.15க்கு விற்பனையாகிறது. வரும் நாட்களில் விலை இன்னும் சரியும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Spread the love