June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

தேனி, ஜூன் 14

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல் போக பாசனத்திற்காக கடந்த 1ந் தேதி 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் 200 கன அடி பாசனத்திற்கும், 100 கன அடி தேனி மாவட்ட குடிநீர் தேவைக்கும் வெளியேற்றப்பட்டது. அதன்பிறகு பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 300 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை முதல் பாசனத்திற்கு 400 கன அடியும், குடிநீர் தேவைக்கு 100 கன அடி என மொத்தம் 500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 131.15 அடியாக உள்ளது. நீர்வரத்து 137 கன அடி.

வைகை அணையின் நீர்மட்டம் 58.20 அடியாக உள்ளது. நீர்வரத்து இல்லை. பாசனத்திற்கு 800 கன அடி, மதுரை மாநகர குடிநீருக்கு 69 கன அடி என மொத்தம் 869 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 3267 மி.கன அடியாக உள்ளது.

Spread the love