திண்டுக்கல், மே 17
முழு ஊரடங்கு காரணமாக, போக்குவரத்து வசதியின்றி முள்ளங்கியை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள மைக்கேல்பாளையம், கோட்டூர், கோட்டூர், சங்கால்பட்டி பகுதியில் முள்ளங்கி பயிரிட்டுள்ளனர். இப்பகுதி விவசாயிகள் நான்கைந்து பேர் ஒன்று சேர்ந்து விளைபொருட்களை ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு, திண்டுக்கல், நிலக்கோட்டை கமிஷன் மண்டிகளுக்கு கொண்டு செல்வது வழக்கம். தற்போது ஊரடங்கால் கமிஷன் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஒரு சில விவசாயிகள் தாங்களே வாகனங்களில் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இன்னும் சிலர் பறிக்காமல் அப்படியே விட்டுள்ளனர்.
எனவே, விவசாயிகளை அணுகி வியாபாரிகள் கொள்முதல் செய்தால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்கும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.