May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மூலிகை சாகுபடி செய்தால் மும்மடங்கு வருமானம் பெற வாய்ப்பு

தமிழகத்திலுள்ள உள்ள எல்லா மாவட்டங்களிலும் அந்த அந்த மண் வள தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ற வகையில் மூலிகை மருத்துவ தாவரங்கள் பயிரிட ஏற்ற சூழ்நிலை நிலவுகிறது. குறிப்பாக விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் அவுரி, நித்திய கல்யாணி, அதலைக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. கரூர், நாமக்கல் மாவட்டத்தில் முருங்கை, செங்காந்தள் மலர் சாகுபடி செய்யப்படுகிறது. பொதுவாக ஒவ்வொரு களைச்செடியும் மூலிகை மருந்தாக நமது மூதாதையர்கள் பயன்படுத்தி வந்தனர். சீனாவுக்கு அடுத்தபடியாக நமது நாட்டில் மூலிகை மருத்துவம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.

தற்போது கொரானா கட்டுப்படுத்த பல்வேறு மருந்துகளுடன் நிலவேம்பு கசாயம், பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே விவசாயிகள் தங்களது நிலப்பரப்பில் சிறிதளவாவது மூலிகை சாகுபடி செய்து அதிக வருமானம் பெற வாய்ப்பு உள்ளது. மூலிகை பயிர்கள் சாகுபடியில் குறைந்தபட்ச நீர்ப்பாசன வசதி போதுமானது. பயிர் காப்பு செலவும் குறைவு. மூலிகை சாகுபடி செய்ய போகும் விவசாயிகள் தமிழ்நாடு மருத்துவ தாவரங்கள் வாரியம் சென்னையில் ரூ.5000/- கட்டி உறுப்பினராக சேர்ந்தால் தொழில்நுட்ப வசதிகள், ஆலோசனைகள், வழிகாட்டல் கிடைக்கும். ஒன்றிய அரசின் ஆயுஸ் அமைச்சகத்தின் கீழ் வழங்கப்படும் மானிய உதவிகள் கிடைக்கும். ஹிமாலாயா, டாபர் போன்ற கம்பெனிகள் இந்த மூலிகைகளை கொள்முதல் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் அரோமோ மிஷன் திட்டத்திலும் வெட்டிவேர், லெமன் கிராஸ், துளசி, நன்னாரி சாகுபடி செய்யப்படுகிறது. தோட்டக்கலை துறையும் மூலிகை சாகுபடியை ஊக்குவிக்க எண்ணற்ற மானிய திட்டங்களை வழங்கி வருகிறது. எனவே விவசாயிகள் ஒரே பண பயிர்களை சாகுபடி செய்யாமல் இதுவும் (மூலிகை) பண பயிர் என்று கருதி சாகுபடி செய்து மும்மடங்கு வருமானம் பெறலாம்.

தகவல் : அக்ரி சு.சந்திர சேகரன், வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை. 94435 70289.

Spread the love