August 15, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மெட்டாரைசியம் அனிசோப்லியா – உற்பத்தி

சிவகங்கை, ஜூலை 13

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விரிவாக்க சீரமைப்பு திட்டம் (அட்மா) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கீழ்கண்ட மெட்டாரைசியம் அனிசோப்லியா – உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் அ.அம்சவேணி விரிவான முறையில் எடுத்துக் கூறினார்.

மண்ணில் இயற்கையாக வளரும் ஒரு பூஞ்சானம் ஒட்டுண்ணியாக செயல்படுவதன் மூலம் பல்வேறு பூச்சிகள் மற்றும் புழுக்களில் நோயை ஏற்படுத்துகிறது. இப்பூஞ்சையால் ஏற்படும் நோய் பச்சை மஸ்கார்டைன் நோய் என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் அதன் வித்துக்கள் பச்சை நிறமாக இருக்கும் 200 க்கும் மேற்பட்ட பூச்சி இனங்களை இது தொற்றுவதைக் கண்டறியப்பட்டுள்ளது.

எதை கட்டுப்படுத்தும்:
• மெட்டாரைசியம் அனிசோப்லியா – பூச்சிகள், வண்டுகள் மற்றும் புழுக்களை பாதிக்கும் ஒரு பூஞ்சை.
• தென்னை- காண்டாமிருக புழு
• மக்காசோளம்- படைப்புழு
• காய்கறிகள்- காய் துளைப்பான்
எப்படி அழிக்கும்:
· பூஞ்சை வித்துகள் பூச்சியின் வெளிப்புற மேற்பரப்பில் இணைந்தவுடன் அவை முளைக்கும் மற்றும் வளரத் தொடங்கும்.
· பூச்சியின் வெளிப்புற எலும்புக்கூட்டை ஊடுருவிய பின் பூச்சியின் உள்ளே அவை வேகமாக வளரும், பூச்சி இறக்கும்.
· பாதிக்கப்பட்ட பூச்சியுடன் தொடர்பு கொள்ளும் மற்ற பூச்சிகளும் பாதிக்கப்படுகின்றன.
· மெட்டாரைசியம் அனிசோப்லியா பூச்சிகள், பூச்சிகளின் புழுக்களை பாதிக்கும், ஆனால் வண்டு புழுக்களை மட்டுமே பாதிக்கும், ஏனெனில் வண்டுகளின் வலிமையான வெளிப்புற எலும்புக்கூட்டை ஊடுருவ இயலாது.

பேரளவு உற்பத்தி :
· அரிசி தவிடு கலந்த மரவள்ளி கிழங்கு வற்றலுடன் பிற்சேர்க்கையாக யூரியா அல்லது மீன் தூள் சாறு
· கொப்பரை தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் இளநீர்.

கேரட் நீர் நொதி:
· 40 கிராம் கேரட் துண்டுகளை 250 மிலி கூண்டு குடுவையினுள் இட்டு, 15 மிலி வடிநீர் சேர்க்கவும்.
· கூம்பு குடுவையை (ஊழniஉயட குடயளம) பஞ்சு வைத்து அடைத்து பின் 20 நிமிடத்திற்கு 15 Pளi க்கு அழுத்த அனற் கலனில் (யுரவழஉடயஎந) வைக்கவும்.
· குடுவையை குளிரச் செய்து, அடுக்குப் பாய்வு கலனில் மெட்டாரைசியம் அனிசோப்லியா பு+ஞ்சை வித்துக்களை குடுவையினுள் செலுத்தவும்.
· இரண்டு வாரம் அறை வெப்பநிலையில் வைத்து பின் அறுவடை செய்யவும்.

உபயோகிக்கும் முறை:
விதை நேர்த்தி: மெட்டாரைசியம் கலவையை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் கலந்து விதைக்கவும்.
வயலில் இடுதல்: விதைப்பிற்கு முன் ஒரு ஏக்கருக்கு மெட்டாரைசியம் 1 கிலோ + 50 கிலோ மட்கிய சாண எரு.
தெளிப்பு முறை: 1 கிலோ மெட்டாரைசியம் + 500 லிட்டர் தண்ணீர் ஃ ஒரு ஏக்கருக்கு.
எருக் குழி: ஒரு எருக்குழியில் 250 மி.லி. மெட்டாரைசியம் உடன் 750 மி.லி. நீர் சேர்த்து தெளிப்பதால் வண்டுகளின் இளம் புழுக்களை அழிக்கலாம்.

மெட்டாரைசியம் அனிசோப்லியா – 15-25 ஆம் நாட்களில் லிட்டருக்கு 5 கிராம் (1ஒ108 ஊகுருஃப) என்ற அளவில் 10 நாட்கள் இடைவெளியில் நுனிக்குருத்தில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். ஈரப்பதத்தை 60மூ அல்லது அதற்கும் அதிகமாக பராமரிக்க பரிந்துரைக்கிறோம்.
கவனிக்க:

பூச்சி கொல்லிகளை இத்துடன் கலக்க கூடாது . என்று எடுத்து கூறினார்.

Spread the love