October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் சென்னையில் ரூ.61,843 கோடியில் 2ம் கட்டப் பணிகள் முதல்வர் ஆய்வு

சென்னை, அக்.8

மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் சென்னையில் ரூ.61,843 கோடியில் 2ம் கட்டப் பணிகள் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

இது குறித்து விரிவான செய்தியாவது:

சென்னை பெருநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடவும், மக்களின் பயண நேரத்தை குறைத்து, பயணத்தை எளிமையாகவும், அதிநவீன வசதியாக அமைத்திடவும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு கலைஞரின் தலைமையிலான அரசால் 2007ம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு, முதல்கட்ட திட்டத்தின் கட்டுமானப் பணிகளை அப்போதைய துணை முதல்வர் மு.க, ஸ்டாலினால் 2009ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வைக்கப்பட்டு, தற்போது சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ், மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான வழித்தடம் (45.8 கி.மி, கலங்கரைவிளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச் சாலை வரையிலான வழித்தடம் (26.1 கி.மி மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான வழித்தடம் (47.0 கி.மி, என மொத்தம் 118.9 கி.மீ நீளத்திலான 3 வழித்தடங்களை ரூ.61,643 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் நிதியுதவியுடன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் ரூ.389.42 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய சதுக்கத் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இத்திட்டத்தின் கீழ் வெளியூர் இரயில், புறநகர் இரயில், பறக்கும் இரயில், மெட்ரோ இரயில், மாநகரப் போக்குவரத்து மற்றும் இதரப் பொதுப் போக்குவரத்துகளை ஒருங்கிணைத்தல், பூந்தமல்லி நெடுஞ்சாலையின் குறுக்கே 2 சுரங்க நடைபாதைகள், நிலத்தடி வாகன நிறுத்தங்கள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான கட்டடம், அருகில் உள்ள ரிப்பன் மாளிகை, விக்டோரியா பொதுக்கூடம், சென்ட்ரல் புறநகர் இரயில் நிலையம், சென்ட்ரல் இரயில் நிலையம், இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை லிய்யிற்லிழிதுஷ்யிதுஷ்ளலிளீற் உள்ள பகுதியை உலகத்தரத்திற்கு இணையாக மேம்படுத்தும் பணிகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார். மத்திய சதுக்கத்தினை சிங்காரச் சென்னையின் மணிமகுடமாக விளங்கும் வகையில், நேர்த்தியாக பணிகளை குறித்த காலத்தில் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

பின்னர், கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கப் பகுதிக்கு சென்று, கத்திப்பாரா மேம்பாலத்தின் அடியில் உள்ள குளோவர் பகுதிகளில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் பன்முகப் போக்குவரத்துகளை ஒருங்கிணைத்து, பயணிகள் ஒரு போக்குவரத்திலிருந்து மற்றொரு போக்குவரத்திற்கு மாறிச் செல்வதற்கும், அப்பகுதியில் காத்திருக்கும் போது பயணிகளுக்கான வசதிகளைச் செய்து கொடுப்பதற்கும் ரூ.14.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை பார்வையிட்டு, அப்பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும்படி அலுவலர்களை அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, முதல்வர் போரூர், இராமச்சந்திரா மருந்துவமனை எதிரில், சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் தெள்ளியகரம் மெட்ரோ நிலையத்தின் கட்டுமானப் பணிகளையும், அங்கு அமைக்கப்பட்டு வரும் உயர்த்தப்பட்ட மெட்ரோ நிலையக் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, மவுண்ட் – பூந்தமல்லி சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளுமாறும், கட்டுமானப் பணிகளின் போது பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.

Spread the love