August 13, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மேக வெடிப்பு (CLOUD BURST)

கடந்த இரண்டு தினங்களாக செய்திதாளில் பார்த்து இருப்பீங்க, அமர்நாத் பகுதியில் மேக வெடிப்பால் எற்பட்ட வெள்ளத்தால் 15க்கு மேற்பட்டோர்கள் பலியானதும், 30க்கு மேற்பட்டோர்கள் வெள்ளத்தால் இழுத்து செல்லப்பட்ட செய்திகளை தான்.

அப்படி என்றால் மேக வெடிப்பு என்பது என்ன? அது எப்படி நிகழ்கிறது ? என்பதை பற்றி காண்போம். பெரும்பாலும் மலைப்பாங்கான பகுதியில் அடிக்கடி எற்படும் இயற்கை நிகழ்வாக மேக வெடிப்பு பார்க்கப்படுகிறது. இதை தமிழில் “முகிற் பேழ் மழை” என்று அழைக்கப்படுகிறது. ஓரு மணி நேரத்தில் 100 மி.மீ அளவு மழை கொட்டி தீர்த்தால் அது மேக வெடிப்பு எனப்படும். சில நேரங்களில் இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழையாக பெய்யும். வெப்பமான காற்று தரைபரப்பில் இருந்து மேலே எழுந்து, மேகத்திலிருந்து விழும் மழைத்துளிகளை கீழே விழாமல் தடுத்து, மறுபடியும் மேகத்திற்குள்ளேயே அனுப்புகிறது. இவ்வாறாக மேகத்தில் திரண்டு கொண்டு இருக்கும் மழைநீர், தாங்க முடியாத நிலையில், திடீரென ஓரே சமயத்தில் மழையாக கொட்டிவிடும். இதனால் வெள்ளப் பெருக்கு எற்படும். ஓரு சதுர மீட்டர் பரப்பளவில் 25,000 மெ.டன் நீர் சேருமளவு மழை பெய்யும். இந்திய வானிலை ஆராய்ச்சிபடி பெரும்பாலும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தான் இந்த மேக வெடிப்பு மழை நிகழ்ந்துள்ளன. மேலும் எப்போது, எங்கு நிகழும் என்பதை துல்லியமாக கணக்கிட முடியாது. காலநிலை மாற்றங்களால் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
2021 மற்றும் 2025க்குள் 90 சதவீகித நிகழ்வுகள் இருப்பதாக வானிலை தரவுகள் தெரிவிக்கின்றன.

தகவல் : அக்ரி சு.சந்திர சேகரன், வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை, 94435 70289.

Spread the love