September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு

சேலம், செப்.13

கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக 12,769 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூருக்கு வருகிறது.

ஒகேனக்கலில் தற்போது 11,500 கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் ஒகேனக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 10,529 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று சற்று அதிகரித்து 10,566 கன அடியாக வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரியில் 12,000 கன அடியும், கால்வாயில் 750 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் 76.09 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று 75.89 அடியாக சரிந்தது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து சரியும் பட்சத்தில் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது.

Spread the love