சேலம், ஏப்.26
மேட்டூர் அணைக்கு நீரவரத்து உயர்ந்துள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு, 1,589 கனஅடியாக உயர்ந்தது. மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில், பரவலாக பெய்த கோடை மழையால், சனிக்கிழமை வினாடிக்கு, 1,439 கனஅடியாக இருந்த நீர்வரத்து, 1,589 கனஅடியாக ஞாயிற்றுக்கிழமை அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீருக்கு, 800 கன அடி நீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து உயர்வால், 97.57 அடியாக இருந்த அணை நீர்மட்டம், 97.60 அடியாக உயர்ந்தது.
Spread the love