வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை, மார்ச் 28
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வடமாவட்டங்களில் வெயிலின் அளவு சதம் அடிக்க தொடங்கியுள்ளதால் சுட்டெரிக்கும் வெயில் கொடுமைக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். இருந்த போதும், உள் தமிழக பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தென் மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையொட்டி உள்ள பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.