June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மே தினத்தில் கிராம சபை கூட்டம்

சேலம், மே 2

மே தினத்தன்று சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சேலம் வட்டாரத்தில் உள்ள 14 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
பஞ்சாயத்து வாரியாக பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் சகோதர துறை சார்பாக அனைத்து திட்டங்கள் தொடர்பான விவரங்கள் மற்றும் பயனாளிகள் விபரம் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

மேலும் நடப்பு வருடம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பான விவரங்கள் எடுத்து கூறப்பட்டது.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவு படி சேலம் மற்றும் ஏற்காடு வட்டாரத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களின் நடவடிக்கைகளை கண்கானித்து அறிக்கை சமர்ப்பிக்க உதவி இயக்குநர் விதை சான்று துறை தி.கௌதமனுக்கு ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வில் கலந்து கொண்ட கண்காணிப்பு அலுவலர் கிராம சபை கூட்டம் குறித்து விபரங்கள் மற்றும் பங்கு பெற்ற மற்ற துறை விபரங்களை கேட்டறிந்தார்.

கிராம சபை கூட்டத்திற்கான ஏற்பாடுகளை உரிய வேளாண் உதவி இயக்குநர்கள் கமலம் மற்றும் ரமேஷ் செய்திருந்தனர்.

Spread the love