புது தில்லி, ஏப்.28
தற்போது உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின், வெளிநாட்டு கண்டுபிடிப்பில் சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிUல்டு தடுப்பூசிகள் இந்தியாவில் போடப்பட்டு வருகின்றன.
தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதால், தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு சூழல் நாட்டில் ஏற்பட்டுள்ளது. மேலும், 1ம் தேதி முதல் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி ழங்கப்பட உள்ளது. இதனால், ஏற்படக் கூடிய பற்றாக்குறையை சமாளிக்க, ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் இதை தயாரித்து விநியோகம் செய்யும் உரிமையை ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டி நிறுவனம் பெற்றுள்ளது. இந்த தடுப்பூசி மே 1 முதல் இந்தியாவில் கிடைக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் விலை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. முதலில், ரூ.750க்கு இதை அளிக்கப் போவதாக டாக்டர் ரெட்டி நிறுவனம் தெரிவித்தது. ஆனால், கோவாக்சின், கோவிUல்டு விலை சில நாட்களுக்கு முன் கடுமையாக உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, ஸ்புட்னிக் விலையும் உயர்த்தப்படும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.