June 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மே 14ந்தேதி சபரிமலை கோவில் திறப்பு பக்தர்களுக்கு அனுமதி இல்லை

திருவனந்தபுரம், மே

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வைகாசி மாத பூஜைக்காக வருகிற 14-ந் தேதி திறக்கப்படுகிறது. அன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைப்பார். 19-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும் என செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில், கடந்த மாதம் மாத பூஜையையயாட்டி கோவிட் கட்டுப்பாட்டு தளர்வுகளுடன் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

கேரளாவில் கோவிட் தொற்று வேகமாக பரவி வருவதால் மாநிலம் முழுவதும் மே 8 முதல் முதல் கேரள அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.

முதல் கட்டமாக வருகிற 16-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என கேரள அரசு அறிவித்து உள்ளது. 18-ந் தேதிக்கு பிறகு, புதிய அரசு பதவி ஏற்ற பிறகு ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் சபரிமலை தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Spread the love