May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மே 15 முதல் யமஹா ஆலை பணிகள் தற்காலிக நிறுத்தம்

சென்னை, மே 12

யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஆலை பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்து இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் காஞ்சிபுரம் மற்றும் உத்திரபிரதேச மாநிலத்தின் சூரஜ்பூர் ஆலை பணிகள் மே 15 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

உற்பத்தி பணிகள் இம்மாத இறுதி வரை நிறுத்தப்பட இருக்கிறது. நாட்டில் கோவிட் தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து ஆலை பணிகள் நிறுத்தப்படுவதாக யமஹா நிறுவனம் தெரிவித்துள்ளது. கார்ப்பரேட் அலுவலகம் மற்றும் பகுதி அலுவலக பணிகளை மேற்கொள்வோர் தொடர்ந்து வீட்டில் இருந்தபடி பணியாற்றுவர்.

தற்போதைய சூழ்நிலையில் ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு மட்டுமே நிறுவனத்திற்கு முக்கியமான ஒன்று. வினியோகஸ்தர்கள் மற்றும் டீலர்களுடன் இணைந்து பணியாற்றி, இதன் மூலம் ஏற்படும் பாதிப்பை முடிந்தளவு குறைக்க யமஹா நிறுவனம் முயற்சித்து வருகிறது என தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Spread the love