புது தில்லி, ஏப்.27
இந்தியாவில் கோவிட் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், இந்தியாவிலிருந்து இயக்கப்படும் விமானங்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான விமான சேவை மே 15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு ஹாங்காங், ஈரான், துபை, பிரிட்டன் ஆகிய நாடுகளும் இந்தியாவுடனான விமான சேவைக்கு தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கோவிட் பாதிப்பின் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்குத் தேவைப்படும் மருத்துவ ஆக்சிஜனுக்கு பல மாநிலங்களில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக பல்வேறு நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்தைத் துண்டித்து வருகின்றன.