May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மே 23ல் நெஃப்ட் சேவை நிறுத்தம்: ஆர்பிஐ தகவல்

மும்பை, மே 18

மே 22 வரும் சனிக்கிழமை இரவு 12 மணி முதல் ஞாயிறு (மே 23) பிற்பகல் 2 மணி வரையில் 14 மணி நேரத்துக்கு நெஃப்ட் பணப்பரிமாற்ற சேவையை வங்கி வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியாது என்று ஆர்பிஐ அறிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அந்த சேவை வழங்கும் வசதியை தொழில்நுட்பரீதியாக மேம்படுத்தும் பணி நடைபெறவுள்ளதால் சேவை நிறுத்தப்படுவதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

தேசிய மின்னணு பணப்பரிவர்த்தனை சேவையை ஆர்பிஐ நிர்வகித்து வருகிறது. ஆண்டின் அனைத்து நாள்களிலும் இந்த சேவை கிடைத்து வருகிறது. நெட்பேங்கிங் வசதியைப் பயன்படுத்தும் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கியில் இருந்து மற்றவர்களின் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்ப இந்த வசதியைத்தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

மேலும், கடன் அட்டை, கடன் தவணைக்கான தொகை உள்ளிட்டவற்றை செலுத்துவதற்கும் இந்த சேவை பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், என்இஎஃப்டி சேவையை தொழில்நுட்பரீதியாக மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்வதால் வரும் சனிக்கிழமை (மே 22) முதல் ஞாயிற்றுக்கிழமை (மே 23) பிற்பகல் 2 மணி வரை இந்த வகையிலான பணப்பரிமாற்றம் நிறுத்தப்படுகிறது. எனவே, வாடிக்கையாளர்கள் தங்கள் அத்தியாவசிய பணப்பரிமாற்றங்களை இந்த நேரத்துக்கு முன்னதாக முடித்துக் கொள்ளலாம். இது தொடர்பாக வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தகவல்களைத் தெரிவிக்க வேண்டும் என்று ஆர்பிஐ வலியுறுத்தியுள்ளது.

Spread the love