சென்னை, ஏப்.28
வரும் மே 4-ம் தேதி ரியல்மி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் டிவி மாடல் ஒன்றை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
குறிப்பாக ரியல்மி இந்தியா மூன்றாவது ஆண்டு விழா ஆனது வரும் மே 4-ம் தேதி நடைபெற உள்ளது. எனவே இந்த விழாவில் ரியல்மி ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவந்த தகவலின்படி, இந்த ஸ்மார்ட் டிவியின் சிறப்பம்சங்களாவது:
டால்பி விசன் மற்றும் ஆடியோ, ஹேண்ட்ஸ்-ஃப்ரீ வாய்ஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 32-இன்ச் மற்றும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்கள் முழு எச்டி திரை வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இந்த டிவி மாடல்கள் 178 டிகிரி கோணங்களை ஆதரிக்கிறது. குறிப்பாக இந்த சாதனங்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
மீடியாடெக் குவாட்-கோர் பிராசஸர் வசதியுடன் கார்டெக்ஸ்-ஏ54 சிபியு ஆதரவும் உள்ளது. மேலும் மாலி-470 எம்பி3 ஜபியு ஆதரவு இருப்பதால் இயக்கத்திற்கு அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள்.
ரியல்மி 32-இன்ச் மற்றும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்கள் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது. மேம்பட்ட ஆடியோ அனுபவத்திற்காக இரண்டு ஆல்-ரேஞ்ச் ஸ்பீக்கர்கள் மற்றும் இரண்டு ட்வீட்டர்களைக் கொண்டுள்ளது. ரியல்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள் ஆல் இன் ஒன் ரிமோட் கண்ட்ரோலுடன் வருகிறது.
மேலும் இது நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு ஸ்ட்ரீமிங் தளங்களுடன் வருகிறது.