July 25, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மே7ல் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்கிறார்?

சென்னை, மே 3

தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற மே 7 ஆம் தேதி பதவியேற்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும் பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பெருவாரியான இடங்களில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமையவுள்ளது. முதல்முறையாக ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

இந்நிலையில் மே 4ந்தேதி செவ்வாய்க்கிழமை எம்எல்ஏக்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.

மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து ஆசி பெற்றனர். இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலினை முதல்- அமைச்சராக எம்.எல். ஏ.க்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கிறார்கள். அதன் பிறகு மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகை சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடித்தை வழங்குகிறார்.

அப்போது எந்த தேதியில் பதவி ஏற்பது என்ற விவரம் வெளியிடப்படும். அனேகமாக வருகிற 7-ந் தேதி மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கிண்டி ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு விழா நடைபெறும் என தெரிகிறது. இந்நிலையில் வருகிற மே 7 ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) அவர் பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Spread the love