June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் கடந்த நிதியாண்டில் 17.38 சதம் சரிவு

சென்னை, ஏப்.21

கடந்த நிதியாண்டில் நாட்டின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், 17.38 சதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: கடந்த 2018-19 நிதியாண்டில், இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தக மதிப்பு, ரூ.1.12 லட்சம் கோடி என்ற நிலையை எட்டியது. இந்த வர்த்தகம், கோவிட் தொற்றால், 2019 – 20ம் நிதியாண்டில், ரூ.1.09 லட்சம் கோடியாக குறைந்தது.

கடந்த நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான முதல் ஐந்து மாதங்களும், ஆடை ஏற்றுமதி வர்த்தகம் சரிவடைந்தே காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், 2020, செப்டம்பருக்கு பின், வளர்ச்சி நிலைக்கு திரும்பியது. ஆனாலும், வர்த்தகத்தில் வளர்ச்சி நிலை நீடிக்கவில்லை. டிசம்பர் முதல், மீண்டும் வர்த்தகம் வீழ்ச்சி அடைந்தது. அதனால், கடந்த நிதியாண்டுக்கான, நாட்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், ரூ.90,624 கோடியாக சரிந்துவிட்டது.

இது, கடந்த 2019 – 20ம் நிதியாண்டை விட, 17.38 சதம் குறைவாகும். பின்னலாடை ஏற்றுமதியில், திருப்பூர், லூதியானா, கோல்கட்டா, பெங்களூரு போன்ற நகரங்கள், நாட்டின் பிரதான பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக மையங்களாக உள்ளன. கடந்த நிதியாண்டில், நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்றுமதி, 9.92 சதம் பின்னடைவை சந்தித்துள்ளது.

Spread the love