January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

யுனிகார்ன் நிறுவனங்களின் பட்டியல் இந்தியா 3வது இடம் பிடித்தது: ஹூரன் ஆய்வு

மும்பை, டிச.23

100 கோடி டாலர் மதிப்பைக் கொண்ட யுனிகார்ன் நிறுவனங்களின் பட்டியலில் ஒரே ஆண்டில் 33 நிறுவனங்கள் இணைந்ததையடுத்து பிரிட்டனை இந்தியா பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஹுரன் ஆய்வு மையம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஸ்டார்ட்அப் உலகில் 100 கோடி டாலர் மதிப்பைக் கொண்ட (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,500 கோடி) நிறுவனங்களைத்தான் யுனிகார்ன் நிறுவனங்கள் என்று அழைக்கின்றனர். இந்திய நகரங்களில் அதிக யுனிகார்ன் நிறுவனங்களைக் கொண்ட நகரமாக பெங்களூரு உள்ளது. அதற்கு அடுத்தபடியாக, மும்பை, புணே, தானே, தில்லி அருகே உள்ள குருகிராம் ஆகியவை உள்ளன.

யுனிகார்ன் பட்டியலில் ஒரே ஆண்டில் 33 நிறுவனங்கள் இடம் பிடித்ததையடுத்து பிரிட்டனை இந்தியா பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. மேலும், கடந்த ஆண்டில் யுனிகார்ன் நிறுவனங்களின் எண்ணிக்கையில் இந்தியா நான்காவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய யுனிகார்ன் நிறுவனங்களின் பட்டியலில் கல்விச் சேவையில் ஈடுபட்டு வரும் ஸ்டார்ட்அப் நிறுவனமான பைஜூஸ் 2,100 கோடி டாலர்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.58 லட்சம் கோடி) முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து, இன்மொபி (1,200 கோடி டாலர்), ஒயோ (950 கோடி டாலர்), ரேஸர்பே (750 கோடி டாலர்) ஆகியவை உள்ளன. யுனிகார்ன் பட்டியலில் முதல், இரண்டாவது இடங்களை முறையே அமெரிக்கா, சீனா ஆகியவை தக்கவைத்துக் கொண்டுள்ளன.

Spread the love